தலங்க பிரதேசத்தில் இலங்கை மின்சார சபையில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி நிதி மோசடி செய்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி பணம் பெற்றுகொண்டு மோசடி செய்ததாக தலங்கம பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கபெற்று இருந்தது.
இந்நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 33 வயதுடைய நபர் மற்றும் 27 வயதுடைய அவரின் மனைவியும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இருவரும் தலங்கம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சந்தேக நபர்கள் இருவரும் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி தொலைபேசி அழைப்பின் ஊடாக கடந்த மார்ச் மாதம் முதல் 768,300 ரூபா பெற்று கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பட்டுள்ளார்கள் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

