ஊடகவியலாளர் மீதான தாக்குதல் – மேலும் இரண்டு கோப்ரல்கள் கைது

355 0

ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு, கோப்ரல் தர இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இவர்கள் குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில், நேற்று கைது செய்யப்பட்ட இராணுவ மேஜர் ஒருவர் உட்பட மூன்று இராணுவத்தினரையும் எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இந்தநிலையிலேயே மேலும் இரண்டு பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊடகவியலார் கீத் நொயர் மீது கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.