தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலரும் – ஓ.பன்னீர்ச்செல்வம்

251 0

தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலரும் என ஓ.பன்னீர்ச் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமன்ற வாக்கெடுப்பின் பின்னர் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன் நம்பிக்கை வாக்கெடுப்பானது ஜனநாயகத்திற்கு முரணான வகையில் மேற்கொள்ளப்பட்டதாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் கருத்துக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் குற்றம் சுமத்தினார்.

இதனிடையே, அறவழிபோராட்டம் மேற்கொண்ட நிலையில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழக எதிர்கட்சி தலைவர் மு.கா ஸ்டாலின் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பெரும்பான்மையை நிருபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது.

இதன்போது சட்டமன்றத்தில் எதிர் கட்சியான திராவிட முன்னேற்றகழகம், சபாநாயகர் தனபாலின் உத்தரவின் பேரில் வெளியேற்றப்பட்டது.

விசேட காவல்துறையினர் அவரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.

இதனைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினரும் வெளிநடப்புச் செயதனர்.

இந்தநிலையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் எடப்பாடிபழனிச்சாமி 122 பெரும்பான்மையை பெற்றவெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன்போது திராவிடமுன்னேற்றகழகம், பன்னீர்செல்வம் அணி, காங்கிரஸ் உள்ளிட்ட தரப்பினபினர் இரகசியவாக்கெடுப்புக்கு கோரியபோதிலும் அதனை சபாநாயகர் ஏற்கவில்லை.

இந்தநிலையில் இதனை கண்டித்து திராவிட முன்னேற்றகழகத்தினர் மெரினாகடற்கரையில் அறவழிபோராட்டம் நடத்தினர்.

இதன்போது காவல்துறையினர் அவர்களை கைதுசெய்து, திருமணமண்டபத்தில் தடுத்துவைத்திருந்தநிலையில் இரவு 9 மணியளவில் விடுவித்தனர்.

இந்தநிலையில், சட்டமன்றத்தில் ஸ்டாலின் தாக்கப்பட்டமைதொடர்பில் பல்வேறுதரப்பினரும் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், தமிழக சட்டமன்றத்தில் ஸ்டான் உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 18 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் கைது செய்ய்பபட்ட நிலையில் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தமிழகத்தில் தோன்றியுள்ள அரசியல் குழப்பநிலையினை அடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சி ஏற்படுத்தப்படும் வாய்ப்புகள் தோன்றியுள்ளதாக இந்திய தாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.