மற்றுமொரு பேருந்து விபத்து

280 0

வாத்துவை சுதுவெளிமங்கட பகுதியில் லொறியொன்றும் பஸ்ஸொன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்த 16 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறையில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த பஸ் மீது, பின்னால் வந்த லொறி பேருந்தின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து அருகில் உள்ள விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

லொறியின் சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாத்துவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.