அமெரிக்காவில் மர்ம நபர் சுட்டதில் 2 போலீசார் காயம்

184 0

அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள நெவார்க் நகரில் ஒரு கட்டிடத்தின் மேல்புறத்தில் இருந்து மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதனால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர்.

மர்ம நபர் சுட்டதில் 2 போலீசார் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் தேடி வருகிறார்கள். இதுகுறித்து நியூஜெர்சி கவர்னர் பிலிப் மர்பி கூறும்போது, “உள்ளூர் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு இருக்கிறேன். அவர்களுக்கு அனைத்து ஆதரவும் தொடர்ந்து அளிப்போம். குடியிருப்புவாசிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்” என்றார்.