நடமாடும் சேவையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!

178 0

கிளிநொச்சியில்  வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் நடமாடும் சேவை நடைபெற்ற  இடத்தின் முன்பாக காணாமல் காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி) செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து  போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்

குறித்த  போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (01) வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்  உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,  அரசுக்கும்  குறிப்பாக  காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி) செயற்பாடுகளுக்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும்  பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு  போராட்டத்தில் ஈடுபட்டனர்

கானமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி) மூலம் கடிதங்கள் கிடைக்கப் பெற்ற கானமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குறித்த அலுவலகத்துக்கு பதிவுக்கு சென்றபோது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை வழிநடத்தபவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதையடுத்து பொலிஸாருக்கும் போரட்டக்காரர்களுக்குமிடையில்  முறுகல் ஏற்பட்டது

பின்னர் விரும்பிய மக்கள் சென்று பதிவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.