சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னை பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல் அமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தேசிய தலைவர்களும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அதேபோல், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலினும் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்து நேற்று அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னை பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை அவர் தெரிவித்தார். மேலும், தற்போது அமைந்துள்ளது மக்கள் விரோத ஆட்சி என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலினை பார்த்து சிரித்ததாக சசிகலா உள்ளிட்ட அவரது தரப்பினர் கடுமையாக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

