அஹுங்கல்ல நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் 41 வயதான கொமாண்டோ உத்தியோகத்தர் எனவும், அவரே கொலையை செய்வதற்கு ரி56 துப்பாக்கியை வழங்கியவர் எனவும் பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
குறித்த துப்பாக்கி கிளிநொச்சி முகாம் இரண்டாம் கொமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த ரி56 – 2612651 என்ற துப்பாக்கி எனத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் நேற்று (16) கடமையில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக அஹுங்கல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

