தீ விபத்துக்கு உள்ளான கஜூமாவத்த பகுதியின் குடியிருப்பாளர்களில் 214 பேர் புதிய குடியிருப்பை பெற்றுக்கொள்ள அடிப்படை குறைந்தப்பட்ச தகைமைகளை கூட கொண்டிருக்கவில்லை ஆகவே நகர அபிவிருத்தி மானிய கொள்கையின் பிரகாரம் அவர்களுக்கு புதிய வீடுகள் வழங்குவது சிக்கலானது.என நகர அபிவிருத்தி அபிவிருத்தி அதிகாரசபை வீடமைப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் சட்டவிரோத குடியிருப்பாளர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட போதும் அரசியல் தலையீட்டுடன் பலர் சட்டவிரோதமான முறையில் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கஜூமாவத்த பகுதியில் அரசியல் தலையீட்டுடன் பெரும்பானாலோர் சட்டவிரோதமான முறையில் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கஜூமாவத்த பகுதியில் கடந்த மாதம் 27ஆம் திகதி இரவு தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீ விபத்தில் அப்பகுதியில் குடியிருப்புக்கள் முழமையாக தீக்கிரையாகின.இச்சம்பவம் தொடர்பில் விரைவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கினார்.அதற்கமைய தீ விபத்து தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கஜூமாவத்த பகுதியில் தீ விபத்துக்குள்ளான குடியிருப்புக்களில் வாழ்ந்தவர்களில் 214 பேர் புதிய குடியிருப்பு ஒன்றை பெற்று கொள்வதற்கான அடிப்படையான குறைந்தப்பட்ச தகைமை கூட கொண்டிருக்கவில்லை.ஆகவே நகர அபிவிருத்தி மானிய கொள்கைக்கமைய அவர்களுக்கு புதிய வீடுகள் வழங்குவது சிக்கலானது என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தீ விபத்துக்குள்ளான கஜூமாவத்த பகுதி தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான 5 ஹேக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது.
2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நகர அபிவிருத்தி புதுப்பிக்கத்தக்க செயற்திட்டத்தின் கீழ் வீடற்றவர்களுக்கு புதிய வீடுகளை வழங்கும் வரை தற்காலிக குடியிருப்புக்களை உருவாக்க தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான இந்த பகுதி பயன்படுத்தப்பட்டது.அதற்கமைய 275 குடும்பங்கள் அவ்வாறு தற்காலிக அடிப்படையில் இந்த பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள்.
தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டவர்களுக்கு தொடர்மாடி குடியிறுப்புக்களில் நிலையான குடியிருப்புக்கள் வழங்கப்பட்ட போதும் இப்பகுதியில் ஒரு அலகில் 50 குடும்பங்கள் சட்டவிரோதமான முறையில் குடியமர்ந்துள்ளனர்.2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரசியல் தலையீட்டுடன் இப்பகுதியில் 291 குடும்பங்கள் சட்டவிரோதமான முறையில் குடியமர்த்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
2015ஆம் ஆண்டுக்கு பிறகு அரசியல் தலையீட்டுகள் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள் இப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.இக்காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் குடியமர்த்தப்பட்டவர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு,கஜூமாவத்த பகுதி முமையாக விடுவிக்கப்பட்டது.
இருப்பினும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் 291 குடும்பங்கள் இப்பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் குடியமர்ந்துள்ளனர்.தகுதி அடிப்படையில் 50 குடும்பங்களுக்கு நிலையான குடியிறுப்பை வழங்க 2019ஆம் ஆண்டு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதுடன்,20 குடும்பங்களுக்கு நிலையான வீடுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டது.
நகர அபிவிருத்தி மானிய கொள்கை;கமைய 214 பேருக்கு புதிய வீடுகளை வழங்க முடியாது.ஏனெனில் அவர்கள் அடிப்படையான குநை;தப்பட்ச தகைமையினை கூட கொண்டிருக்கவில்லை ஆகவே அவர்களுக்கு புதிய வீடுகள் வழங்குவது சிக்கலானது என நகர அபிவிருத்தி அதிகார சபை அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

