நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதில் அசமந்தப்போக்கு – அனுர

163 0

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் தொடர்ந்தும் அசமந்த போக்கில் செயற்படுவதாக னுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிலியந்தலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், உலக வங்கி உரங்களை கொள்வனவு செய்ய உதவியளிக்கின்றது.

அது மட்டுமல்லாமல் குறித்த நிதி உதவி முறையாக செயல்படுகிறதா என்பதை ஆராய குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புகின்றது.

அவர்கள் காலத்தை கடத்துவதற்காகவே அரசாங்கத்தை பொறுப்பேற்றுள்ளனர். மகிந்த ராஜபக்ஷ களுத்துறையில் ‘மீண்டும் எழுவோம்’ என கோஷமிடுகிறார்.

ஆனால், அவர் எழுந்த வேகத்தை விட வீழ்ந்த வேகம் அதிகம்” என்றும் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.