புத்தளம் உடப்பு ஆண்டிமுனை பகுதியில் கடலாமையொன்று உயிரிழந்த நிலையில் இன்று (11) காாலை கரையொதிங்கியது.
குறித்த கடலாமையை உடற்கூற்று பரிசோதனைக்காக ஆனவிழுந்தான் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த கடலாமை (Olive Redly) ஒலிவ நிற வகையைச் சார்ந்ததென ஆனவிழுந்தான் வலய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி தெரிவித்தததார். அத்துடன் கடலாமை 30 கிலோ எடைக் கொண்டு காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
குறித்த கடலாமைகள் பல ஆண்டுகாலமாக வாழுகின்ற உயிரினமாக கருதப்படுவதுடன், ஆமையைகளை இறைச்சிக்காக அதிகமாக கொள்ளப்பட்டு வருவதினால் அழிவடைந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன்பாக கொழும்பு துறைமுக கடற்பரப்பிற்கு வெளியே எம்.வி. எக்ஸ்பிரஸ் கப்பல் தீப்பிடித்து எரிந்ததையடுத்து பல கடலாமைகள், டொல்பின்கள், திமிங்களங்கள் தொடர்ந்தும் உயிரிழந்த நிலையில் கரையொதிங்கியமைக் குறிப்பிடத்தக்கது.

