கிளிநொச்சியில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை இயங்க வைக்க அரச அதிபர் முயற்சி

353 0
கிளிநொச்சி மாவட்டத்தில் நீண்டகாலமாக பூட்டிய நிலையில் உள்ள பொருளாதார சந்தைக்கட்டிடத்தினை இயக்கும் நோக்கில் குறைந்த வாடகையில் உள்ளூர் வர்த்தகர்களிற்கு வழங்குவதற்கு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக மாவட்ட அரச அதிபர் சு.அருமைநாயகம் தெரிவித்தார்.
இது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டு பூட்டிய நீண்டகாலமாக பூட்டிய நிலையில் உள்ள பொருளாதார மையத்தின்  சந்தைக்கட்டிடத்தினை இயக்கும் நோக்கில் ஓர் குழு ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அக் கட்டிடத்தினில் 40 கடைகள் உள்ள அவற்றினை உள்ளூர் வியாபாரிகளிற்கு ஓர் குறைந்த வாடகை அடிப்படையில் வழங்கி உள்ளூர் உற்பத்திகள் விற்பனை மையமாக நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதன் விபரங்களும் அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள குழுவிற்கு கிடைக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு குறித்த விற்பனை நிலையங்கள் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் நிலையங்களிற்கு மாதாந்தம் 3500 ரூபா அறவிட எதிர்பார்க்கப்படுகின்றது.
இவற்றின் அடிப்படையில் குறத்த விற்பனை நிலையங்கள் விரைவில் இயங்க ஆவண செய்யப்படும். என்றார்.