கிளிநொச்சியில் புலிகளின் நீதி நிர்வாகத்துறை இயங்கிய காணியை……………….

236 0
கிளிநொச்சி மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் நீதி நிர்வாகத்துறை இயங்கிய பிரதேசம் சிறைச்சாலைக்குரிய காணி என்பதனால் அதனை தம்மிடமே ஒப்படை்க ஆவண செய்யுமாறு பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவது ,
கிளிநொச்சி மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் நீதி நிர்வாகத்துறை இயங்கிய பிரதேசத்தினை உள்ளடக்கியதாக சுமார் 6 ஏக்கர் வரையான பிரதேசத்தில் படையினர் நிலைகொண்டிருந்தனர். அவ்வாறு நிலைகொண்டிருந்த படையினர் கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் அப் பகுதியில் இருந்து வெளியேறியிருந்தனர். அவ்வாறு படையினர் வெளியேறியதனையடுத்து குறித்த பகுதியில் வசித்ததாக பலரும் உரிமைகோரி அப்பகுதியில் குடியேறினர்.
இவ்வாறு குடியேறியவர்கள் தாம் 1990 முதலும் 1996 முதலும் குடியிருந்த்தாக தெரிவித்தே அதற்கான ஆதரங்களைச் சமர்ப்பித்து அந்த நிலங்களை உரிமைகோரி குடியமர்ந்தனர். இருப்பினும் தற்போது அந்த நிலங்கள் சிறைச்சாலைக்குரிய காணிகள்  என்பதனால் அதனை தம்மிடமே ஒப்படை ஆவண செய்யுமாறு பிரதேச செயலாளருக்கு கடிதம் சிறைச்சாலை ஆணையாளரால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இப் பகுதியில் இருந்த சிறைக்கூடமானது 1983ம் ஆண்டொப்படைக்க  பின்னர். யுத்தத்தின் பின்னரே அழிவடைந்து கைவிடப்பட்டதாகவும் 1974ம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற ஜே.வி.பி கலவரத்தின்போது கைது செய்யப்பட்ட பலர் இங்கே அடைத்து வைத்திருந்த சமயம் எடுக்கப்பட்ட சான்னுகறும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு சிறைச்சாலை ஆணையாளரால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதா என பிரதேச செயலாளரிடம் தொடர்பு கொண்டு பேட்டபோது
குறித்த பிரதேசம் தமக்கே உரியது என்பதனால் அப் பகுதியினை சிறைச்சாலைத் திணைக்களத்திடம் ஒப்படைக்க ஆவண செய்யுமாறு கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. இருப்பினும் அப் பபுதிகளில் தாம் வசித்ததாக வேறுபலர் உரிமைகோரி அங்கு குடியமர்ந்துள்ளனர்.
எனவே இவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட விடயத்திற்கான பதில் அனுப்பப்படும். என்றார்.