வவுனியா வேப்பங்குளத்தில் உள்ள தனியார் காணியில் அமைந்துள்ள கைவிடப்பட்ட மலசலகூடத்தினை புனரமைக்கும் செயற்பாட்டினை நேற்று (04) மேற்கொண்ட போதே குழியில் இருந்து குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது 60 மில்லி மீற்றர் குண்டு ஒன்றும், கைக்குண்டு ஒன்றும், சிறிய ரக மிதிவெடி ஒன்றையும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


