பொலன்னறுவை பிரதான தபால் காரியாலயம் உட்பட 21 தபால் காரியாலயங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.
பலுகஸ்தமன தபால் காரியாலயத்தின் ஊழியர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் நபரை இதுவரையிலும் கைதுசெய்யவில்லை என்ற காரணத்தினால் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தபால் மற்றும் தொலைதொடர்பு ஒன்றியத்தின் பிரதி செயலாளர் பீ.எல்.கித்சிறி தெரிவித்தார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பலுகஸ்தமன பொலிஸார் தெரிவித்தனர்

