உக்ரைனின் ஜபோரிஜியாவில் ரஷியா தாக்குதல் – பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

216 0

உக்ரைனின் ஜபோரிஜியா நகரில் ரஷிய படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர். 28 பேர் காயமடைந்துள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. இதுதொடர்பான அறிவிப்பை ஜபோரிஜியா பிராந்திய ஆளுநர் ஸ்டாருக் ஆன்லைன் மூலம் வெளியிட்டுள்ளார். மேலும், ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை நோக்கி மக்கள் சென்ற வாகனங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். தாக்குதலில் சிக்கிய வாகனங்கள் தீப்பற்றி எரிவதையும், சாலையில் உடல்கள் கிடப்பதையும் அந்த படங்களில் காண முடிகிறது.

இந்நிலையில், உக்ரைனின் ஜபோரிஜியா நகரில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. 85க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.