காணியை விடுவிக்க இராணுவத் தளபதி உறுதி!

260 0

முல்லைத்தீவு மாவடட்டத்தின் கேப்பாப்புலவு பகுதி காணியை விரைவில் விடுவிப்பதாக இராணுவத் தளபதி மேஜர் கிருஷாந்த டி சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளார்.

உக்கிரமடைந்துள்ள இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவத் தளபதியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடிய போதே இராணுவத்தளபதி இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்.

இத்தகவலை நேற்று செவ்வாய்க்கிழமை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

கேப்பாப்புலவு மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பாக அமைச்சர் சுவாமிநாதன் ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அச்சமயம் தொலைபேசி மூலம் இராணுவத் தளபதியைத் தொடர்பு கொண்டு அந்த விவகாரம் தொடர்பில் வினவிய போதே வெகு விரைவில் அக்காணிகளை விடுவிக்க முடியும் என ஜனாதிபதியிடம் இராணுவத்தளபதி உறுதியளித்துள்ளார்.