ஆ.ராசாவுக்கு எதிராக மெரினாவில் இந்து அமைப்புகள் திரண்டு போராட முடிவு

224 0

இந்து மதத்தை பற்றி அவதூறாக பேசியதாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா மீது புகார்கள் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்து அமைப்புகளை திரட்டி மெரினாவில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக 63 இந்து அமைப்புகளின் கூட்டு அமைப்பான இந்து பரிவார் அமைப்பை சேர்ந்தவர்கள் திட்டமிட்டனர்.

இதற்காக சென்னை மாநகர் முழுவதும் பரபரப்பான போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன. மெரினா நோக்கி திரண்டு வாருங்கள் என்கிற கோஷங்களும் அதில் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில் ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையில் உள்ள இந்து பரிவார் அலுவலகத்துக்கு போலீசார் சென்றனர்.

அங்கிருந்த மாநில தலைவர் வசந்தகுமாரை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், இந்து பரிவார் அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த அமைப்பினர் மறியலிலும் ஈடுபட்டனர்.