ஜேர்மன் நகரம் ஒன்றில் வெடிவிபத்து

160 0

ஜேர்மன் நகரம் ஒன்றில் பொதுக்கழிவறை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மூன்று பெண்கள் படுகாயமடைந்தார்கள்.

சம்பவ இடத்தில் கிடந்த டியோடரண்ட் ஸ்பிரே போத்தல்களுக்கும் அந்த வெடிவிபத்துக்கும் தொடபிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கிறார்கள்.

ஜேர்மன் நகரமான Halleஇல், பொதுக்கழிவறை ஒன்றில் ஏதோ வெடிக்க, அருகிலிருந்த கட்டிடங்கள் குலுங்கின. பொலிசார் அங்கு விரைந்தபோது, அங்கு டியோடரண்ட் ஸ்பிரே போத்தல்கள் பல சிதறிக்கிடப்பதைக் கண்டுள்ளார்கள்.

அந்த போத்தல்களுக்கும் வெடிவிபத்துக்கும் தொடர்பிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள். அதாவது, அந்த டியோடரண்ட் போத்தல்களை கொளுத்தி அதன் மூலம் வெடிவிபத்தை உருவாக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட நிபுணர்கள், சம்பவம் தொடர்பான விசாரணையில் பொலிசாருக்கு உதவிவருகிறார்கள்.

இந்த சம்பவத்தில் முறையே 12 மற்றும் 13 வயதுள்ள சிறுமிகள் இருவரும், 51 வயதுள்ள பெண் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.