மே 9 சம்பவம் – 33 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

204 0

நாடு முழுவதும் கடந்த மே மாதம் 9ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த தவறிய 33 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 33 பொலிஸ் OICகள் இவ்வாறு  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த OICக்கள் வெவ்வேறு பொலிஸ் நிலையங்களில் வேறு கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

அதன்படி, காலி, குருநாகல், குளியாபிட்டிய, உயிலங்குளம், அனுராதபுரம், மிஹிந்தலை, மின்னேரிய, வாரியபொல, தங்கொடுவ, ஹெட்டிபொல மற்றும் நாரம்மல உள்ளிட்ட 33 பொலிஸ் நிலையங்களின் OICகளே சாதாரண கடமைகளுக்காக வேறு பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.