கோட்டாவை சந்தித்தார் சுவாமி

134 0

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மஹிந்தவின் சகாவும், பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, நேற்று (28) கொழும்பில் சந்தித்தார்.

அவருடன் பல இந்திய வழக்கறிஞர்கள் மற்றும் தொழிலதிபர்களும் வந்திருந்தனர்.

கொழும்பில் உள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் முன்னேற்றத்தின் மூலம் பொருளாதார மறுமலர்ச்சி தேசிய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை” என்ற தலைப்பில் 15 ஆவது சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டிற்காக சுப்பிரமணியன் சுவாமி இலங்கை வந்துள்ளார்.

இதன்போதே கோட்டாபயவுடனான குறித்த சந்திப்பும் இடம்பெற்றுள்ளது