சம்மாந்துறையில் காட்டு யானை அட்டகாசம்

127 0

சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புளேக் ஜே மேற்கு 3 கிராம சேவையாளர் பிரிவில்அமைந்துள்ள சம்மாந்துறை அல்-உஸ்வா  பிலாண்டேசன் வளாகத்தினுல்  இன்று (28)  அதிகாலை உள் நுழைந்த காட்டு யானை  உஸ்வா பிளாண்டேசன் வாளாகத்தில் உள்ள பயன்தரும் வாழை, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி உள்ளதுடன் வீட்டினையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அல்-உஸ்வா  பிலாண்டேசன் உரிமையாளர்  இஸ்லாலெப்பை முஹம்மது முஸ்தபா மெளலவி தெரிவித்தார்.

மேலும் இம்மாதம் நான்கு தடவைக்கு மேல் காட்டுயானை வந்ததாகவும் மிகவும் கஸ்டத்திற்கு மத்தியில் நான் பயிர்ச்செய்கை செய்திருந்த தென்னை,வாழை,மரவள்ளி போன்ற மரங்களையும் முற்றாக அழித்து நாசப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

அது மாத்திரமில்லாமல் இப் பிரதேசத்தில் ஏற்கனவே இக் குறித்த காட்டு யானை ஒன்றுதான் இரவு வேளைகளில் நடமாடித்திருவதாகவும் இப் பிரதேசத்தில் வாழ்ந்த ஒருவரை அண்மையில் தாக்கி அவர் உயிரிழந்ததாகவும் மேலும் தெரிவித்தார்.

ஆகவே இவ்வாறு மனிதர்களுடைய உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து விளைவித்துக்கொண்டு இருக்கின்ற இந்த காட்டுயானையை இப் பிரதேசத்தில் இருந்து தூரப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக சம்மந்தப்பட்ட  அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது உரையில் கேட்டுக்கொண்டார்.