மதுபான சாலைகளால் கலாச்சார சீர்கேடுகள் இடம்பெறுகின்றது : யோகேஸ்வரன் எம்.பி

227 0

வாழைச்சேனையில் விபுலானந்தர் வீதி என்ற புனிதமான பெயர் இருக்கின்ற வீதியில் இரண்டு மதுபானசாலைகள் இருக்கின்றன. இதன் காரணமாக கலாச்சார சீர்கேடுகள் இடம்பெறுகின்றன, பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை அகற்றுவதற்கு பெற்றோர்களும் உதவிபுரிய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 20 மதுபானசாலைகள் இருக்க வேண்டும். ஆனால் மூன்று மடங்கு மதுபானசாலைகள் காணப்படுகின்றன.

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் 11 மதுபானசாலைகள் அதிகரித்துள்ளன. இதனால் எமது மக்களின் உழைக்குப் பணம் அங்கு செலவிடப்படுகிறது.

மாணவர்கள் மத்தியில் மதுப்பாவனை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நாங்கள் வறுமையின் உச்ச கட்டத்தில் காணப்படுகின்றோம்.

வாழைச்சேனைப் பகுதியில் வெளியிடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு தற்போது கேரள கஞ்சா விற்பனை நடைபெறுகிறது.மாணவர்கள் மரண வீடுகளில் மது அருந்துகிறார்கள் இதனை நான் நேரடியாக பார்க்க கூடியதாக இருந்தது. இந்த விடயத்தில் பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டும்.

வாழைச்சேனையில் விபுலாந்தர் வீதி என்ற புனிதமான பெயர் இருக்கின்ற வீதியில் இரண்டு மதுபானசாலைகள் இருக்கின்றன.இதன் காரணமாக கலாச்சார சீர்கேடுகள் இடம்பெறுகின்றன. பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை அகற்றுவதற்கு பெற்றோர்களும் உதவிபுரிய வேண்டும் என மேலும் தெரிவித்தார்.