தாய்வான் தொடர்பான அவுஸ்திரேலியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை

89 0

அவுஸ்திரேலியா தாய்வான் குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை எனினும் சீனா பாரதூரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுப்பதற்காக அவுஸ்திரேலியா அமெரிக்காவுடன் இணைந்து செயற்படும் என பாதுகாப்பு அமைச்சர் ரிச்சட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.

சீனா தாய்வான் மீது தாக்குதலை மேற்கொண்டால் தாய்வானை பாதுகாக்க அமெரிக்கா படைகளை பயன்படுத்தும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ள நிலையிலேயே அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் இதii  தெரிவித்துள்ளார்.

தாய்வான் தொடர்பான தனது கொள்கைகள் மாறவில்லை என்பதை அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ள   அவுஸ்திரேலிய பாதூகாப்பு அமைச்சர் கிழக்கு ஆசியாவில் இந்தோ பசுபிக் குறித்து அமெரிக்கா தொடர்ந்தும் அக்கறை கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் கருத்திற்காக அமெரிக்க ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தோ பசுபிக்கில் அமெரிக்கா தனது பிரசன்னத்தை மீள உறுதி செய்வதை நாங்கள் வரவேற்கின்றோம்,தாய்வான் நீரிணையில் தற்போது காணப்படும் நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை என்ற  நிலைப்பாட்டை நாங்கள் மீள வெளியிடுகின்றோம் எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.