சட்டவிரோதமாக வேட்டைக்கு சென்ற 17 பேர் கைது

135 0

வில்பத்து கலா ஓயா நீலபெம்ம பகுதியில் சட்டவிரோதமாக வேட்டைக்கு சென்ற 17 பேர் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக வேட்டைக்கு செல்வதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த அதிகாரிகள் புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து நேற்று (24.09.2022) முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது வேட்டைக்கு சென்ற 17 பேர் கைது செய்யப்பட்டதுடன் இருவர் துப்பாக்கிகளுடன் தப்பிச் சென்றதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 6 துப்பாக்கி ரவைகள், கத்திகள், ஆயுதங்கள், பெட்டரிகள், மின்குமிழ்கள், மீன்பிடி வலைகள் போன்றவை மீட்க்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று நீதிமன்றத்தில் முன்னிபை்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது தலா ஒரு இலட்சம் ரூபா விகிதம் 17 பேருக்கும் 17 இலட்சம் ரூபா சரீர பிணை வழங்கப்பட்டுள்ளதுடன் அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.