எலிசபெத் மகாராணியின் சேவைகள், தியாகங்கள் அனைவருக்கும் முன்மாதிரியாகும்

94 0

பிரித்தானியாவின் காலனித்துவத்தின் கீழ் பல நாடுகள் இருந்து வந்துள்ளன. காலனித்துவத்தின்போது இடம்பெற்ற விடயங்களை நாங்கள் மறைக்கவோ மறக்கவோ முடியாது.

என்றாலும் பொதுநலவாய நாடுகளுடன் இணைந்து அவர் மேற்கொண்ட சேவைகளை மதிக்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு தொடர்பான அனுதாப பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவி்கையில்,

இரண்டாம் எலிசபெத் மகாராணி அவரது நாட்டுக்கு பாரிய சேவை செய்திருக்கின்றார். அவரது தியாகத்தை நாங்கள் மதிக்கின்றோம். பொதுநலவாய நாடுகளுடன் இணைந்து அவர் மேற்கொண்ட சேவையை மதிக்கின்றோம்.

காலனித்துவ காலத்தில் இருந்து பிரச்சினைகள் காணப்பட்டாலும் பின்னர் இணைந்து செயற்பட்டிருக்கின்றாேம். காலனித்துவத்தின்போது இடம்பெற்ற விடயங்களை நாங்கள் மறைக்கவோ மறக்கவோ முடியாது.

பிரித்தானியாவின் காலனித்துவத்தின் கீழ் பல நாடுகள் இருந்து வந்துள்ளன. அதன் பின்னர் பொதுநலவாய நாடுகளுடன் இணைந்து நாங்கள் செயற்பட்டிருக்கின்றோம். அவரின் மறைவால் பிரித்தானியா மக்கள் மிகவும் கவலையுற்றிருக்கின்றார்கள்.

எலிசபெத் காராணியின் சேவைகள் மற்றும் தியாகங்கள் முழு உலகத்தாருக்கும் முன்மாதிரியாகும். அவரின் இழப்பை பாரியதொரு இழப்பாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

எனவே அவரின் மறைவால் கவலையுற்றிருக்கும் அவரது புதல்வரான மூன்றாவது சார்ள்ஸ் மன்னர் உட்பட  ராேயல் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். மறைந்த மகாராணியின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம் என்றார்.