சதொச விற்பனை நிலையங்களில் 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தற்காலிகமாகக் குறைப்பு

80 0

சதொச நிறுவனத்தினால் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம், வெள்ளை அரிசி, நாட்டரிசி, பருப்பு என்பவற்றின் விலைகளும், வெள்ளை சீனியின் விலைகளுமே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனத் தலைவர் பசந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் விலை 175 ரூபாவிலிருந்து 150 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசியின் விலை 185 ரூபாவிலிருந்து 179 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசியின் விலை 194 ரூபாவிலிருந்து 185 ரூபாவாகவும் , இறக்குமதி செய்யப்படும் பருப்பின் விலை 429 ரூபாவிலிருந்து 415 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று வெள்ளை சீனியின் விலையும் 285 ரூபாவிலிருந்து , 278 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள சகல சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த விலைகளுக்கு குறித்த பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என்றும், எனினும் இந்த விலை குறைப்பு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாத்திரமே நடைமுறையிலிருக்கும் என்றும் சதொச நிறுவன தலைவர் பசந்த யாபா அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.