டிஜிபி அலுவலகத்தில் காவலர்களிடம் மனுக்கள் பெற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

196 0

சென்னை மெரினாவில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வருகை தந்திருந்தார். அங்கு முதல்வருக்கு காவல் துறையினர் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், டிஜிபி வளாகத்தில் மகிழம் மரக்கன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நட்டு வைத்தார். மேலும், “உங்கள் துறையில் முதல்வரின்” திட்டத்தின் கீழ் காவல்துறையினரிடம் கோரிக்கை மனுக்களையும் முதல்வர் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.