விபத்துக்களில் மூன்று பேர் பலி

10 0

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

பன்னல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னல – தங்கொடுவ வீதியில் மாகந்துறையில் இருந்து பன்னல நோக்கி பயணித்த லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பெரிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லொறியின் சாரதியும், முன் இடது பக்க இருக்கையில் அமர்ந்திருந்த பயணியும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, எஹலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – ரத்னபுர வீதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

கிரிந்திவெல – நிட்டம்புவ வீதியில் தியகொடெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.