சீனாவின் உய்குர் இனப்படுகொலைகளுக்கா விசாரணையை வலியுறுத்தி 38 ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உய்குர்கள் மற்றும் பிற துருக்கிய மக்களுக்கு எதிராக சீனர்கள் செய்த இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து அவசரமாக விசாரணையைத் தொடங்குமாறு இந்த கடிதத்தின் ஊடக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயத்தின் சமீபத்திய அறிக்கையைத் தொடர்ந்து, இந்தச் செயல்கள் ‘மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாக இருக்கலாம்’ என்ற முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஐ.நா உயர் ஸ்தானிகரின் அறிக்கையை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. அவதூறு மற்றும் பொய்களை அடிப்படையாகக் கொண்டது என அறிக்கையை சீனா சாடியுள்ளது.
எக்ஸைலில் உள்ள கிழக்கு துர்கிஸ்தான் அரசாங்கத்தின் பிரதிநிதிகள், கிழக்கு துர்கிஸ்தான் தேசிய விழிப்புணர்வு இயக்கம் மற்றும் ஜூலை 2020 இல் பாதிக்கப்பட்ட அனைத்து உய்குர் பிரதிநிதிகளால் தாக்கல் செய்யப்பட்ட ஆரம்பக் முன்வைக்கப்பட்ட 15 முறைப்பாடுகளை சுட்டிக்காட்டியே அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

