திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி பவனி! மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி

138 0

தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி நேற்று வவுனியாவை சென்றடைந்த நிலையில் மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ஊர்தி பவனி

தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியினரின் ஏற்பாட்டில்  ‘திலீபன் வழியில் வருகின்றோம்’ என்ற ஊர்தி பவனி கிழக்கு மாகாணத்தின் பொத்துவிலில் ஆரம்பித்து யாழ் நல்லூர் நோக்கி முன்னெடுக்கப்படுகின்றது.

திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி பவனி! மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி(Photos) | Bhavani Carrying Dileepan S Portrait

 

தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி

5 ஆம் நாளான நேற்று(19.09.2022) குறித்த திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி வவுனியாவை சென்றடைந்த நிலையில் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் உணர்வெழுச்சியுடன் திலீபனின் திருவுருவப்படத்திற்கு தீபம் ஏற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி பவனி! மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி(Photos) | Bhavani Carrying Dileepan S Portrait

 

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அகவணக்கத்துடன் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், சில பகுதிகளில் மக்கள் கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.