முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனது யூடியூப் கணக்கின் ஊடாக வெளியிட்ட திரைப்படத்தை யூடியூப் நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது.
யூடியூப் கொள்கைக்கு எதிரான ஆபாசமான உள்ளடக்கம் உள்ளதால் ராமநாயக்கவின் ‘பஹு பார்யா’ திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்க தனது யூடியூப் சனலில் தனது பழைய திரைப்படங்களை விளம்பரப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

