இலங்கையில் கொரோனாவின் தற்போதைய நிலவரம்

118 0

​நாட்டில் மேலும் 4 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

உயிரிழந்த நபர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 2 ஆண்களும் 2 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டில் மேலும் 29 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 670,570 ஆக அதிகரித்துள்ளது.