அழுதுபுலம்புவதை தவிர பாதிக்கப்பட்டவர்களிற்கு வேறு வழியில்லை- ஜெனீவாவில் சந்தியா

185 0

இலங்கை அரசாங்கம் தண்டனையிலிருந்து விலக்களிப்பதை  மனித உரிமைகள் தொடர்பான அதன் உத்தியோகபூர்வ கொள்கையாக பின்பற்றுகின்றது என ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா ஜெனீவா மனித உரிமை பேரவை அமர்வில் தெரிவித்துள்ளார்.

வறுமை மற்றும்  தொடர்ச்சியாக பின்தொடரப்படுதல் துன்புறுத்தல்கள் மெதுவான மற்றும் பின்தங்கியசட்ட அமைப்பை கொண்ட நாட்டில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தல் என்பது அதிகாரபூர்வமற்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாக காணப்படுகின்றது என சந்தியா எக்னலிகொட ஜெனீவாவில் தெரிவித்துள்ளார்.

அவ்வாறானஒரு நாட்டில் பாதிக்கப்பட்டவர்களிற்கு   வீதிகளில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதேவேளை செய்யக்கூடிய விடயம் என்னவென்றால் அழுதுபுலம்புவது மாத்திரம்தான் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டவர்களின் குழுவின் 23 வது அமர்வில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பி;ட்டுள்ளார்.

ஐநா குழு பாதிக்கப்பட்டவர்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய உண்மை மற்றும் நீதியை வழங்கக்கூடிய சட்டபூர்வமான பொறிமுறையை முன்வைக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2010 ஜனவரி 24 ம் திகதி தனது கணவர் காணாமல்போனது முதல் தான் அரசாங்கம் மற்றும் அதன் அமைப்புகளினால் எதிர்கொண்ட நெருக்கடிகளை தெளிவுபடுத்தியுள்ள சந்தியா எக்னலிகொட இவ்வாறான மோசமான சூழ்நிலையில் காணாமல்போன தனது கணவர் தொடர்பான வழக்கு முட்டுக்கட்டை நிலையில் உள்ளதால்  நீதி வழங்கப்படுமா என்பதே பிரதான சவால் எனவும் தெரிவித்துள்ளார்.

2017 இல் பிரதமராக பதவி வகித்தவேளை தற்போதைய ஜனாதிபதி காணாமல்போன அனைவரும் உயிரிழந்துவிட்டனர் அல்லது  வெளிநாட்டு சென்றுவிட்டனர் என தெரிவித்தார் அவர் நீதியை வழங்குவார் என எதிர்பார்க்க முடியாது எனவும் சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியான பின்னர் அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டது அந்த ஆணைக்குழு விசாரணையாளர்களையும்  சாட்சிகளையும் குற்றம்சாட்டப்பட்டவர்களாக மாற்றியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அந்த ஆணைக்குழு உயர்நீதிமன்ற உத்தரவை மீறியது,சாட்சியங்களிடமிருந்து வாக்குமூலங்களை பெற்றது இறுதியில் இந்த வழக்குடன் தொடர்புடைய இராணுவத்தினரை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யுமாறு பரிந்துரைத்தது எனவும் சந்தியா ஜெனீவாவில் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர்களின் தாய்மார்களும் குடும்பத்தவர்களும் போராட்டத்தில் ஈடுபடும் அதேவேளை தங்கள் அன்புக்குரியவர்கள் குறித்த விடைகளை பெறுவதில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை ஜெனீவாவில்சுட்டிக்காட்டியுள்ள சந்தியா எக்னலிகொட 1990 முதல் நான்கு தசாப்தங்களாகிவிட்டன,பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ள ஆனால் இன்றுவரை எந்த நீதியும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.