முச்சக்கர வண்டி சங்கத்தினர் கொழும்பில் போராட்டம் !

110 0

முச்சக்கரவண்டி சங்கத்தினர் இன்று (14) கொழும்பில் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

 

கொழும்பு – பொரளை கெம்பல்பார்க் பகுதியில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் கோட்டாவை தமக்கு அதிகரித்து வழங்குமாறு கோரிய முச்சக்கரவண்டி சங்கத்தினர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.