அமெரிக்கா பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் குண்டு வெடிப்பு ?

158 0

அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம பொருள் ஒன்று வெடித்தது. பல்கலைக்கழகத்தின் ஹோம்ஸ் ஹால் அருகே பார்சல் ஒன்று வெடித்து சிதறியது. இதனால் குண்டு வெடித்ததாக பெரும் பரபரப்பு நிலவியது. வெடி சத்தம் கேட்டு மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். மர்ம பொருள் வெடித்ததில் பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் காயம் அடைந்தார்.

உடனே பல்கலைக்கழகத்துக்கு எப்.பி.ஐ அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்தனர். வெடித்து சிதறிய மர்ம பொருளை ஆய்வு செய்தனர். இதற்கிடையே அப்பகுதியில் உள்ள அருங்காட்சியகம் அருகே மர்ம பார்சல் ஒன்று கண்டறியப்பட்டது. அதை வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரத்தில் உண்மையில் குண்டு வெடித்ததா அல்லது வேறு காரணமா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.