உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதிப்படுத்த தேசிய திட்டம் தேவை – ஜனாதிபதி

159 0

இலங்கையில் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்துறை ஒருங்கிணைந்த பொறிமுறையை ஸ்தாபிக்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

விவசாயத்தை நவீனமயமாக்குவதன் ஊடாக உற்பத்தி மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்துவதன் மூலம் விவசாயத்தை அந்நிய செலாவணி ஈட்டும் துறையாக மாற்ற வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகளாவிய உணவுப் பிரச்சினைக்கு முகங்கொடுத்து உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் கூட்டான முறையில் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆகவே உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டத்துடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.