கல்முனை பகுதியில் உள்ள கடற்பரப்பில் கடந்த நாட்களில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக கரைவலை மீன்பிடி மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.
எனினும், நேற்று (12) கீரிவகை மீன்கள் அதிகளவில் பிடிக்கப்பட்டமையால் கரைவலை மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த கீரி வகை மீன்கள், உள்ளூர் சந்தையில் கிலோகிராம் ஒன்றுக்கு 600 ரூபாய் 800 ரூபாய்க்கு விற்பனையாகின்றது.

