தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:- ஒன்றிணைந்த வடார்க்காடு மாவட்டத்தில் கழகத்தை வளர்த்த மூத்த முன்னோடியும், கழகச் சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளருமான பெ.சு.திருவேங்கடம் நேற்று இரவு உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
தாம் கழகத்துக்காக ஆற்றிய பணிகளுக்காக 2017-ம் ஆண்டு முப்பெரும் விழாவில் “அண்ணா விருது” பெற்ற பெருமைக்குரியவர் பெ.சு. திருவேங்கடம். அவரை இழந்து வாடும் அவரது மகன்-கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி. சரவணனுக்கும், குடும்பத்தினருக்கும் திருவண்ணாமலை மாவட்டக் கழகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

