யாழ்.கச்சேரி பகுதியில் 20 இலட்சம் ரூபா தங்க ஆபரணங்களுடன் போதைப்பொருள் வியாபரி கைது

224 0

யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியில் வைத்து 8 அரை கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் போதைப்பொருள் வியாபாரியான 24 வயது இளைஞனை நேற்று திங்கட்கிழமை (12) இரவு 10 மணியவில் கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்பெக்டர் ரி. மேனன் தலையிலான பொலிஸ் குழுவினர் சம்பவதினமான நேற்று இரவு 10 மணியளவில் கச்சேரி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது வியாபாரத்துக்காக ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக்கொண்டு வீதியில் நடந்து சென்ற இளைஞனை சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்து சோதனையிட்டபோது அவனிடமிருந்து 8 அரை கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 20 இலட்சம் ரூபா கொண்ட தங்க ஆபரணங்களான 6 காப்புக்கள் 4 சங்கிலிகள், தோடுகள்  மீட்டுள்ளனர்.

இதில் கைதுசெய்யப்பட்டவர் அந்த பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் எனவும் இவர் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளவர் எனவும் இவரிடமிருந்து மீட்கப்பட்ட தங்க ஆபரணங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இவரை இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர்.