நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையில் இன்று அனைத்து உணவுகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று யாழ்ப்பாணத்தில் இயங்கும் உணவகம் ஒன்று மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் ஒரு உணவகமாக மாறியுள்ளது.
தெல்லிப்பழை சந்தியில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் வீதியில் உள்ள இந்த உணவகத்தில் தேநீர் 10 ரூபாவிற்கு (ஏலக்காய், இஞ்சி போட்டு தேநீர். சீனி விருப்பத்திற்கேற்ப) விற்பனை செய்யப்படுகின்றது.
இவ் உணவகம் தொடர்பில் கடை உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில்,
உணவு 30 ரூபாய்
”இயற்கை முறையிலான மூலிகை உணவுகள் உள்ளன. 30 ரூபாவுடன் வந்தால் வயிற்றுப்பசி போக்கும் அளவுக்கு சாப்பிடலாம்” என உரிமையாளர் கூறுகின்றார்.
இரண்டு ஆசிரியர்கள் இணைந்து இந்த உணவகத்தினை பி.ப 2.30 தொடக்கம் பி.ப 11.00 மணிவரை நடத்துகின்றனர்.
மக்கள் பசியுடன் இருக்கக்கூடாது என்ற நோக்குடன் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கை முறையில் உணவகம் அலங்கரிக்கப்பட்டுள்ளது எனவும் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

