இந்திய வர்த்தகர்களிடம் சஜித் கோரிக்கை!

239 0

இந்திய வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் குழுவொன்றுக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று (17) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.

தொடர்ச்சியாக இந்நாட்டில் மேலும் முதலீடு செய்வதற்கும், வணிக வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் இந்திய வணிக சமூகத்தை ஊக்குவிக்கவும் அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதோடு, தொழிற்துறைகளை மேலும் மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் தேவையான சூழல் தயார் செய்யப்பட வேண்டும் எனவும் இச்சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டது.