மிளகாய்த் தூளை வீசி தங்கநகை கொள்ளை

125 0

சமயலறையில் இருந்த பெண்ணொருவரின் முகத்தில் மிளகாய்த் தூளை வீசி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 2.5 பவுண் தங்க சங்கிலியை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று  கிறேட்வெஸ்டன் -ஸ்கல்பா தோட்டத்தில் பதிவாகியுள்ளது.

நேற்று (17) காலை  6 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது வீட்டுக்கு பின்னால் இருந்த சமையலறையில் குறித்த பெண் வேலை செதய்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் முகத்தின்  மீது மிளகாய்த் தூளை வீசி விட்டு, அவரது வாயை மூடி கழுத்தில் அணிந்திருந்த 2.5 பவுண் தங்க சங்கிலியை அபகரித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து பெண் கூச்சலிட அயலவர்களும் ஓடி வந்து திருடனை தேடியபோது, அவன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான்.

இச்சம்பவம் தொடர்பில்  தலவாக்கலை பொலிஸார் சந்தேக நபரை தேடும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.