3 முக்கிய விடயங்களில் கவனம் செலுத்துமாறு இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

74 0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை (10) இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் இலங்கையின் நெருக்கடியான காலகட்டங்களில் ஐரோப்பிய ஒன்றியம் பங்குதாரராக இருக்கும் என ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் நம்பிக்கை வெளியிட்டனர்.

சிவில் மற்றும் மனித உரிமைகள், அத்துடன் கருத்துச் சுதந்திரம் , கருத்துவேறுபாட்டு உரிமை ஆகியன முக்கியமானது என இதன்போது ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநதிகளால் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையை மீண்டும் சரியான பாதையில் கொண்டு செல்ல கூட்டு ஒத்துழைப்பு நடவடிக்கை தேவை என்பது ஜனாதிபதியிடம் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிதிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை, சர்வதேச நாணய நிதியம், மனித உரிமை பேரவை ஆகிய 3 பிரதான காரணிகளுக்கு வெளிவிவகார கொள்கைகளில் முக்கியமாக கவனம் செலுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநதிகள் ஜனாதிபதி ரணிலிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த செயன்முறைகள் வெற்றியடைய இலங்கை அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.