பல சேவைகள் அத்தியாவசியமாக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

121 0

பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் குறித்த வர்த்தமானி அறிவித்தலை நேற்று வெளியிட்டுள்ளார்.

அதன்படி, மின்சார விநியோகம், பெற்றோலியப் பொருட்கள் மற்றும் எரிபொருளின் வழங்கல் அல்லது விநியோகம், வைத்திசாலைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் அதனை ஒத்த நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு மற்றும் சிகிச்சையளிப்பு உள்ளிட்ட அனைத்து சேவைகளும் அதற்கான உழைப்பும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.