நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழலில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து, பொதுவான வேலைத்திட்டத்தின் கீழ் செயற்படுவதற்கு ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு சாதகமான பதிலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழங்கியுள்ளதாக, கட்சியின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், சர்வகட்சி அரசாங்கத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

