உலங்குவானூர்த்தியில் மன்னார் சென்ற ரவி கருணாநாயக்க

151 0

ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க நேற்று அவசரமாக தனியார் உலங்குவானூர்த்தியில் மன்னாருக்கு சென்றுள்ளார்.

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இறங்கிய ரவி கருணாநாயக்க தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

உலங்குவானூர்த்தியில் மன்னார் சென்ற ரவி கருணாநாயக்க | Ravi Karunanayake Who Went To Mannar

 

சில மணி நேரங்களுக்கு பின்னர் மீண்டும் அதே உலங்குவானூர்த்தியில் கொழும்பு திரும்பியுள்ளார். மன்னார் சென்றிருந்த அவர் ஊடகங்களிடம் கருத்து எதனையும் வெளியிடவில்லை.

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மன்னாருக்கு ஏன் சென்றிருந்தார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை. அவர் தனிப்பட்ட வர்த்தக நடவடிக்கையாக மன்னார் சென்றிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.