இராமநாதபுரம் – புதுக்காடு, காட்டுப் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, தருமபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 600 லீற்றர் கோடாவும், 62 போத்தல் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தருமபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்களை, எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது

