அரகலயவுடன் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வெளிச்சக்திகள் இணைந்துகொண்டதால் இலங்கை பாசிச பயங்கரவாதத்தை எதிர்கொண்டது – ரணில்

178 0

அரகலயவுடன் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வெளிச்சக்திகள் இணைந்துகொண்டதால் இலங்கை முதல்தடவையாக பாசிச பயங்கரவாதத்தை எதிர்கொண்டது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டியில் தெரிவித்துள்ளார் .

நாட்டின் பொருளாதார நிலை காரணமாக உருவான அரசியல் குழப்பநிலை காரணமாகவே தான் ஜனாதிபதியாகவும் தினேஸ் குணவர்த்தன பிரதமராகவும் வந்ததாக ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி குறித்து கட்சிகள் வெவ்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றன என தெரிவித்துள்ள அவர் சிலர் முன்னைய ஜனாதிபதியின் விவசாய கொள்கையை குற்றம்சாட்டுகின்றனர் சிலர் முன்னைய நிர்வாகத்தை குற்றம்சாட்டுகின்றனர்சிலர் அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்திடம் முன்கூட்டியே செல்லாததே காரணம் என தெரிவிக்கின்றனர் என ரணில்விக்கிரமசிங்;க தெரிவித்துள்ளார்.

நெருக்கடிக்கான காரணங்கள் குறித்து விவாதிப்பதிலோ ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வதிலோ அர்த்தமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரகலயவுடன் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வெளிச்சக்திகள் இணைந்துகொண்டதால் இலங்கை முதல்தடவையாக பாசிச பயங்கரவாதத்தை எதிர்கொண்டது என தெரிவித்துள்ள ஜனாதிபதி அனைத்து கட்சி அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக அனைத்து கட்சிகளும் இணையவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.