ரைஸ் குக்கரால் பலியான நபர்!

181 0

மெதிரிகிரிய மஹா அம்பகஸ்வெவ பிரதேசத்தில் வீடொன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டில் உள்ள ரைஸ் குக்கரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக நேற்று (29) காலை மின்சாரம் தாக்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாகரபுர மஹா அம்பகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

மெதிரிகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.